முதல் பக்கம் தொடர்புக்கு

 

கறவை மாடுகள், எருமைகளுக்கான தீவன மேலாண்மை


தானியங்கள்
மக்காச்சோளம்
  • மக்காச்சோளத்தில் அதிகப்படியான எரி சக்தி மற்றும் நார் சத்தும் உள்ளது.
  • இதில் 8-13 சதவிகித புரதம் உள்ளது.
  • மக்காச்சோளத்திலுள்ள மொத்த சீரணமாகும் சத்துகளின் அளவு 85% ஆகும்.
  • புதிதாகக் கண்டறியப்பட்ட மக்காச்சோள ரகமான ஃபுளோரி 2ல் மெத்தியோனின், மற்றும் லைசின் போன்ற அமினோ அமிலங்கள் அதிகப்படியாக உள்ளன.
  • கால்நடைப் பண்ணையில் உடைக்கப்பட்ட மக்காச்சோளம் மாடுகளுக்குத் தீவனமாக அளிக்கப்படுகிறது.
  • மேற்புற தோல் நீக்கப்பட்ட மக்காச்சோளம், மாடுகளின் அசையூன் வயிற்றில் அசிட்டிக் அமிலம், புரப்பியோனிக் அமிலமாக மாறுவதைக் குறைப்பதால் பாலில் கொழுப்பின் அளவினை அதிகரிக்கிறது.
  • அதிக ஈரப்பதம் கொண்ட மக்காச்சோளத்தினை முறையாக சேமிக்காவிட்டால், அதில் அஸ்பெர்ஜில்லஸ் பூஞ்சை வளர்ந்து அஃப்ளோடாக்சின் எனும் நச்சினை உற்பத்தி செய்கிறது.

கம்பு  
  • கம்பிலுள்ள சத்துகள் சோளத்திலுள்ள சத்துகளைப் போன்றே உள்ளது.
  • இதில் 8-12 சதவிகிதம் புரதமும், டேனின் எனப்படும் பொருளும் அதிகமாக உள்ளது.
  • சோளம் கடினமாக இருப்பதால், அதனை நன்கு அரைத்தோ அல்லது உடைத்தோ மாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம்.
        
அரிசி  
  • அரிசியிலுள்ள புரதம் மற்றும் எரிசக்தியின் அளவு மக்காச்சோளத்திலுள்ள இவற்றின் அளவினை ஒத்ததாகும்.
  • அரிசி பொதுவாக மனிதர்களுக்கு உணவாகப் பயன்படுகிறது.
  • விலையினைப் பொறுத்து, அரிசியினை மாடுகளின் தீவனத்தில் சேர்க்கலாம்.
ஓட்ஸ்
  • ஓட்ஸ் தானியத்தில் அதிக அளவாக நார்ச்சத்தும்,12-16% மும்,  7-15% புரதச்சத்தும் உள்ளது.
  • ஓட்ஸில் மெத்தியோனின், ஹிஸ்டிடின், டிரிப்டோபேன் போன்ற அமினோ அமிலங்கள் குறைவாக உள்ளன. ஆனால் குளுட்டாமிக் அமிலம் அதிகமாக உள்ளது.
  • உடைக்கப்பட்ட அல்லது நொதிக்கப்பட்ட ஓட்ஸ் தானியம் மாடுகளுக்குத் தீவனமாக அளிக்கப்படுகிறது.
பார்லி  
  • பார்லி தானியத்தில் அதிகமான நார்ச்சத்தும் 6-14% புரதமும் உள்ளது.
  • இதில் லைசின் எனும் அமினோ அமிலம் குறைவாக உள்ளது மேலும் இதிலுள்ள எண்ணெய் சத்தின் அளவு 2 சதவிகிதத்திற்கும் குறைவு.
  • இங்கிலாந்தில் உள்ள பண்ணைகளில், மாடுகளின் உடல் எடை அதிகரிப்பதற்காக பார்லி பயன்படுத்தப்படுகிறது.
  • நாட்ச் – 2 எனும் பார்லி ரகம் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. இதில் லைசின் அமினோ அமிலம் அதிகமாக உள்ளது.
         
கோதுமை
  • கோதுமையில் 6-12 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது.
  • கோதுமையின் முளைப்பகுதியில், புரோலமின் மற்றும் குளூட்டெலின் கலந்த குளூட்டன் எனும் புரதக்கலவை உள்ளது.
  • உறுதியான குளூட்டன் கொண்ட கோதுமையினை மாவாகப் பிசையும் போது அது யீஸ்ட்டின் வளர்ச்சியினை ஊக்குவிப்பதால் ரொட்டி உற்பத்திக்கு பயன்படுகிறது.
  • நன்கு அரைக்கப்பட்ட கோதுமையினை மாடுகள் உட்கொள்ளும்போது, அது மாடுகளின் வாயில் ஒட்டிக்கொள்ளுவதால், மாடுகளுக்கு தீவனமாக அளிக்க ஏற்றதல்ல.
  • எனவே நன்றாக அரைக்கப்பட்ட கோதுமையினை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கக்கூடாது.
 

தாவரப் புரதங்கள்
கடலைப் பிண்ணாக்கு    
  • கடலைப் பிண்ணாக்கு கால்நடைகளின் தீவனத்தில் அதிகப்படியாக உபயோகப்படுத்தப்படும் ஒரு சிறந்த புரதச் சத்து வாய்ந்த மூலப்பொருளாகும்.
  • முதல் மற்றும் இரண்டாம் முறையாக எண்ணெய் நீக்கப்பட்ட கடலை பிண்ணாக்குத் தூள் சந்தையில் கிடைக்கிறது.
  • முதல் மற்றும் இரண்டாம் முறையாக இயந்திரங்களின் மூலம் எண்ணெய் நீக்கப்பட்ட கடலைப் பிண்ணாக்குகளும் சந்தையில் கிடைக்கின்றன.
  • கடலைப்பிண்ணாக்கில் ஆமணக்கு தோல் மற்றும் மகுவா எண்ணெய் பிண்ணாக்கும் கலப்படமாக கலக்கப்படுகின்றன.
  • கடலைப் பிண்ணாக்கில் 45% புரதம் உள்ளது. இப்புரதத்தில் சிஸ்டைன், மெத்தியோனின், மற்றும் லைசின் போன்ற அமினோ அமிலங்கள் குறைவாக உள்ளன, ஆனால் வைட்டமின் பி12 மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.

 

அஃப்ளோடாக்சின் நச்சு உற்பத்தி

  • மழைக்காலத்தின் போது கடலைப் பிண்ணாக்கில் அஸ்பெர்ஜில்லஸ் பிளேவஸ் எனும் பூஞ்சையின் தாக்குதலால் அஃப்ளாடாக்சின் எனும் நச்சுப்பொருள் உற்பத்தியாகிறது.
  • பூஞ்சையின் தாக்குதலும், அஃப்ளோடாக்சின் நச்சு உற்பத்தியும் நிலக்கடலையின் வளரும் பருவம், மற்றும்  சேமிக்கும்போதும் அல்லது தீவன உற்பத்தியின் போதும் ஏற்படுகிறது.
  • அஸ்பெர்ஜில்லஸ்பிளேவஸ் மற்றும் அஸ்பெர்ஜில்லஸ்பேரசைட்டிகஸ் எனும் பூஞ்சைகளின் தாக்கத்தால் உணவுப் பொருட்களில் உருவாகும் அஃப்ளோடாக்சின் நச்சு புற்று நோய், மற்றும் இதர நோய்களை உண்டாக்கும் ஒரு கொடிய நச்சாகும்.
  • போதுமான அளவு ஆக்ஜிசன் மற்றும் போதுமான அளவு வெப்பநிலை (10 – 40ºC) மற்றும் அதிகப்படியான ஈரப்பதம்  போன்ற காரணிகள் நிலக்கடலையில் பூஞ்சைகளின் வளர்ச்சியினை ஊக்குவிக்கின்றன.
  • நிலக்கடலை வளரும்போது உள்ள அதிகப்படியான ஈரப்பதம், அதிக ஈரப்பதம் உள்ள போது நிலக்கடலை அறுவடை, அறுவடை செய்த நிலக்கடலையினை சரியாக காய வைக்காதது போன்ற காரணங்களும் நிலக்கடலையில் பூஞ்சைகளின் தாக்குதலை ஊக்குவிக்கின்றன.
  • அப்ளா நச்சில் பி1, ஜி1, பி2 மற்றும் ஜி2 என்ற நான்கு வகைகள் உள்ளன. இதில் பி1 நச்சு அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது.
  • இந்த நச்சினால் பாதிக்கப்பட்ட மாடுகளில் கல்லீரல் பாதிப்பு, பித்தநாள பாதிப்பு, கல்லீரல் புற்று நோய், வயிற்று எரிச்சல், சிறுநீரகக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

சோயாபீன் தூள்  
  • சோயாபீன் தூளில் சிஸ்டைன்,மெத்தயோனின்  போன்ற அமினோ அமிலங்கள் குறைந்த அளவும் மற்ற அமினோ அமிலங்கள் நிறைந்த 44% புரதம் உள்ளது.
  • எல்லா வகையான கால்நடைகளுக்கும் தீவனம் தயாரிக்கும்போது சோயாபீன் தூளை 30% வரை தீவனத்தில் சேர்க்கலாம்.
  • சோயாபீன் தூளில் பொதுவாக ஆமணக்கு உமி, மகுவா புண்ணாக்கு போன்றவை கலப்படங்களாக கலக்கப்படுகின்றன.
  • மற்ற எண்ணெய் வித்துகளைப் போன்றே பச்சை சோயாபீனிலும் நச்சுப்பொருட்களும் இதர உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களான சப்போனின் போன்ற வேதிப் பொருட்களும் உள்ளன. ஆனால் இந்த நச்சுப்பொருட்கள் சோயா பீனை சூடு படுத்தும் போது அழிந்துவிடுகின்றன.

 
சூரிய காந்தி பிண்ணாக்கு  
  • சூரிய காந்தி பிண்ணாக்கில் 40% புரதம் உள்ளது. ஆனால் இப்புரதத்தில் லைசின் அமினோஅமிலம் குறைவாகவும், மெத்தியோனின் அமினோஅமிலம் சோயா புரதத்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது.
  • சூரிய காந்தி பிண்ணாக்கு சீக்கிரம் கெட்டு விடும்.
  • இயந்த்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் சூரிய காந்தி பிண்ணாக்கில் அதிக அளவு பாலி அன்சேச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பாலிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் கொழுப்பினை மிருதுவாக்குவதற்கு சூரிய காந்தி பிண்ணாக்கினை மாடுகளுக்கு அதிக அளவு தீவனமாக கொடுக்கலாம்.
  • மாடுகளுக்கு இந்த பிண்ணாக்கினை தீவனத்தின் அளவில் 20 சதவிகிதம் வரை சேர்க்கலாம்.
  • கன்றுகளுக்கு இந்த பிண்ணாக்கினை கொடுக்கக்கூடாது.

 
பருத்திக் கொட்டை பிண்ணாக்கு  
  • இப்பிண்ணாக்கில் அதிக தரம் வாய்ந்த புரதம் உள்ளது. ஆனால் இப்புரதத்தில் சிஸ்டைன், மெத்தியோனின் மற்றும் லைசின் அமினோஅமிலங்கள் குறைவாக உள்ளன.
  • இப்பிண்ணாக்கில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் விகிதம் 1;6 என்ற அளவில் உள்ளது. எனவே இப்பிண்ணாக்கினை மாடுகளுக்கு கொடுக்கும்போது கால்சியம் சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு
  • பால் கறக்கும் கறவை மாடுகளுக்கு இப்பிண்ணாக்கினை கொடுக்கும் போது, பாலின் கடினத் தன்மை அதிகரிக்கிறது. இதனால் இப்பாலை கடைவதற்கு கடினமாக இருக்கிறது.
  • தோல் நீக்கப்பட்ட மற்றும் தோல் நீக்கப்படாத பருத்திக்கொட்டை பிண்ணாக்கு என சந்தையில் இரண்டு தரங்களில் இந்த பிண்ணாக்கு கிடைக்கிறது.
  • ஒரு கிலோ பருத்திக்கொட்டை பிண்ணாக்கில் 0.3-20 கிராம் காசிப்பால் எனும் மஞ்சள் நிற நிறமி இருக்கிறது.
  • இது ஆண்டிஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது.
  • அசை போடாத விலங்குகளுக்கு காசிப்பால் நச்சுத்தன்மையினை விளைவிக்கிறது. இதனால் பசியின்மை, உடல் எடை குறைதல், சில நேரங்களில் இதய கோளாறால் இறப்பும் கூட ஏற்படுகிறது.
  • காசிப்பாலின் நச்சுத்தன்மையினை போக்க கால்சியம் ஹைட்ராக்சைடு மற்றும் இரும்பு உப்புகளும் சேர்க்கலாம்.
  • எக்ஸ்பெல்லர் இயந்திரத்தின் செயல்பாடு காசிப்பால் நச்சினை செயலிழக்கச் செய்கிறது.

 
அரைத்த தேங்காய் தூள்  
  • இதில் 20-26% புரதம் உள்ளது. ஆனால் இப்புரதத்தில் லைசின், ஹிஸ்டிடின் அமினோ அமிலங்கள் குறைவாக உள்ளன. அரைத்த தேங்காய் தூளில் 2.5-6.5% எண்ணெயும் உள்ளது.
  • இதில் உள்ள அதிகப்படியான எண்ணெய் காரணமாக எளிதில் கெட்டு விடும். இவ்வாறு கெட்டுப்போன தேங்காய் தூளை மாடுகளுக்கு கொடுக்கும்போது கழிச்சலை ஏற்படுத்தும். எனவே மாடுகளுக்கு இதனைக் கொடுக்கும் போது எண்ணெய் நீக்கப்பட்ட தேங்காய் தூளை கொடுக்கவேண்டும்.
  • கோழிகள் மற்றும் பன்றிகளுக்கு மட்டுமே தேங்காய் தூளை தீவனமாக அளிக்கவேண்டும். ஏனெனில் இதில் குறைந்த அளவு புரதமும், அதிக நார்ச்சத்தும் உள்ளது. குறைந்த நார்ச்சத்துடைய தேங்காய் தூளை ஒரு வயிறு உடைய விலங்குகளுக்கு, மெத்தியோனின் மற்றும் லைசின் அமினோஅமிலங்கள் சேர்த்து கொடுக்கலாம்.
  • தேங்காய் தூளை தீவனமாக கொடுக்கும்போது மாடுகளிலிருந்து கிடைக்கும் வெண்ணைய் கொழுப்பு திடமாக இருப்பதால், வெண்ணெய் தயாரிக்க இதனை தீவனமாக மாடுகளுக்கு கொடுக்கலாம்.

 
அரைத்த லின் விதை  
  • லின் விதையில் அதிக புரதம் உள்ளது. இப்புரதத்தில் மெத்தியோனின் மற்றும் லைசின் அமினோ அமிலங்கள் குறைவாகவும், பாஸ்பரஸ் அதிகமாகவும் உள்ளது. இதில் உள்ள பாஸ்பரஸ் சத்து பைட்டேஸ் ஆக உள்ளது. மேலும் இதில் கால்சியம் சத்து மிதமாகவும் உள்ளது.
  • லின் விதையில் அதிக அளவு ரைபோபிளேவின், நிகோடினமைட், பேன்டோதெனிக் அமிலம், கோலின் போன்ற வைட்டமின்கள் அதிகமாக உள்ளது.
  • செலீனியம் நச்சுக்கு எதிராக விலங்குகளை பாதுகாக்கும் தன்மை லின் விதைத் தூளில் உள்ளது.
  • லின் விதை தூள் எனப்படுவது இயந்திரங்களின் மூலம் தயாரிக்கப்பட்டு இரண்டு தரங்களாக சந்தையில் கிடைக்கிறது.
  • எண்ணெய் வித்துகளிலிருந்து தயாரிக்கப்படும் உப பொருட்களில் லின் விதை தூள் சற்றே மாறுபட்டது. ஏனெனில் இது தண்ணீரில் கரைந்து கெட்டியான திரவமாகிறது. இந்த கெட்டிப்படும் தன்மை அதிலுள்ள 10% மியூசிலேஜ் எனும் பொருளால் ஏற்படுகிறது.
  • லினாமெரின் மற்றும் லினேஸ் எனப்படும் நச்சுகள் முதிர்ச்சி அடையாத லின் விதையில் உள்ளன. இந்த லின் விதை தூளை தண்ணீரில் கரைக்கும்போது ஹைட்ரோசயனிக் அமிலம் எனும் நச்சுப்பொருள் உருவாகும்.
  • மேற்கூறிய நச்சு சுவாச மண்டலத்தின் செயல்பாட்டினை குறைத்துவிடும். எனவே விலங்குகளுக்கேற்ப ஒரு கிலோ உடல் எடைக்கு 0.5-3.5 மில்லி கிராம் என்ற அளவில் சேரும்போது ஹைட்ரோ சயனிக் அமிலம்  குறைந்த பட்ச விஷத் தன்மையினை ஏற்படுத்துகிறது.
  • லின் விதைத் தூளை நன்றாக கழுவி, உலர்த்தி, சேமித்து வைப்பதால் அதிலுள்ள நச்சுப்பொருட்கள் அழிந்து,  குறைந்த அளவே இருக்கும்
  • எந்திரங்களால் தயாரிக்கப்பட்ட லின் விதை பிண்ணாக்கு இரண்டு ரகங்களில் சந்தையில் கிடைக்கிறது.

 
கடுகு பிண்ணாக்கு    
  • வட இந்தியாவில் மாடுகளுக்கு கடுகு பிண்ணாக்கு தீவனமாக பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது.
  • இதிலுள்ள சத்துகள் கடலைப் பிண்ணாக்கில் உள்ள சத்துகளை விடக் குறைவு.
  • கடுகுப் பிண்ணாக்கில் உள்ள டிசிபி எனும் புரதம், மற்றும் மொத்த சத்துகளின் அளவு முறையே 27% மற்றும் 74% ஆகும்.
  • இப்பிண்ணாக்கினை தீவனத்தில் 10% வரை சேர்க்கலாம்.
  • இப்பிண்ணாக்கில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் முறையே 0.6% மற்றும் 0.1% என்ற அளவில் உள்ளது.
எள் பிண்ணாக்கு    
  • இப்பிண்ணாக்கில் 40% புரதம் உள்ளது. இப்புரதத்தில் லுயூசின், அர்ஜினின் மற்றும் மெத்தியோனின் அமினோ அமிலங்கள் அதிகமாகவும், லைசின் அமினோ அமிலம் குறைவாகவும் உள்ளது.
  • எள்ளிலிருந்து எண்ணெய் தயாரிக்கும்போது எண்ணெய் நீக்கிய எள்ளிலிருந்து இப்பிண்ணாக்கு தயாரிக்கப்படுகிறது.
  • எள் பிண்ணாக்கில் மூன்று வகைகள் உள்ளன. அவையாவன, சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை எள் பிண்ணாக்கு.
  • வெள்ளை எள் பிண்ணாக்கு, சிவப்பு எள் பிண்ணாக்கை விட அதிக சத்துகள் கொண்டது.
  • இப்பிண்ணாக்கில் பைடிக் அமிலம் அதிகமாக உள்ளது.
  • எள் பிண்ணாக்கு மலமிளக்கும் தன்மை கொண்டது. இதை மாடுகளின் தீவனத்தில் 15% வரை சேர்க்கலாம்.
 

ஆலைகளிலிருந்து கிடைக்கும் உப பொருட்கள்
அரிசித் தவிடு  
  • நெல்லை அரைக்கும் போது கிடைக்கும் நெல்லின் வெளிப்புறத்திலுள்ள தோல் பகுதியே அரிசித் தவிடாகும்.
  • அரிசித் தவிட்டில் 12-14% புரதமும்,  கரையாத கொழுப்பு அமிலங்களைக் கொண்ட 11-18% எண்ணெய் சத்தும் இருப்பதால், சீக்கிரம் கெட்டுவிடும்.
  • எண்ணெய் நீக்கப்பட்ட அரிசித்தவிடும் கிடைப்பதால், மாடுகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தலாம்.
கோதுமைத் தவிடு
  • அதிகப்படியான நார்ச்சத்து கொண்ட கோதுமைத் தவிடு ஒரு நல்ல தீவனமாகும்.
  • கோதுமைத்தவிட்டிலுள்ள நார்ச்சத்து காரணமாக்க, இதனை தண்ணீருடன் பிசைந்து மாடுகளுக்கு கொடுக்கும்போது மலமிளக்கியாக செயல்படுகிறது. மாடுகளுக்கு கழிச்சல் இருக்கும் போது தண்ணீருடன் கலக்காமல் மாடுகளுக்கு கொடுத்தால், கழிச்சலைக் குறைக்கும்.
  • பொதுவாக கோதுமைத் தவிட்டிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் குறைந்த செரிக்கும் திறன் காரணமாக பன்றிகளுக்கும் கோழிகளுக்கும் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.
தானிய பாலிஷ்  
  • அரிசியினை பாலிஷ் செய்யும் போது கிடைக்கும் உப பொருளான அரிசி பாலிஷில் 10-15% புரதமும், 12% கொழுப்புச் சத்தும், 3-4% நார்ச்சத்தும் உள்ளது.
  • இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிக அளவில் உள்ளது. மேலும் இதில் அதிகப்படியான எரிசக்தியும் உள்ளது.
  • அரிசி பாலிஷில் உள்ள  அதிகப்படியான கொழுப்புச் சத்தின் காரணமாக சீக்கிரம் கெட்டு விடுகிறது.
மொலாசஸ்  

  • தேர்வு செய்யப்பட்ட தாவரப் பொருட்களிலிருந்து சாறினைப் பிழியும் போது கிடைக்கும் உபபொருள் மொலாசஸ் ஆகும்.
  • மொலாசஸ், அடர்த்தியான சர்க்கரை, ஹெமி செல்லுலோஸ் மற்றும் தாது உப்புகள் கொண்ட  கரைசலாகும்.
  • நான்கு விதமாக மொலாசஸ் கிடைக்கிறது, அவையாவன, கரும்பு மொலாசஸ், பீட் மொலாசஸ், சிட்ரஸ் மொலாசஸ் மற்றும் மர மொலாசஸ்
  • கரும்பு மொலாசஸ், சர்க்கரை உற்பத்தியின்போது கிடைக்கும் உப பொருளாகும், இதில் 3 சதவிகித புரதமும், 10 சதவிகிதம் சாம்பலும் உள்ளது.
  • பீட் மொலாசஸ் எனப்படுவது பீட்ரூட்டிலிருந்து சர்க்கரையினை பிரிக்கும் பொது கிடைக்கும் உப பொருளாகும். இதில் 6 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது.
  • சிட்ரஸ் மொலாசஸ் கசப்பு சுவையுடையது. இதில் 14 சதவிகிதம் புரதமும் உள்ளது. ஆரஞ்ச் மற்றம் திராட்சையிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யும் போது சிட்ரஸ் மொலாசஸ் கிடைக்கிறது.
  • மர மொலாசஸ், மரத்திலிருந்து பேப்பர் உற்பத்தி செய்யும் போது கிடைக்கும் உப பொருளாகும், இதில் 2 சதவிகிதம் புரதம் உள்ளதால் மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிறது.
  • மொலாசஸ் எரி சக்தி மிகுந்த ஒரு தீவனமாகும், மேலும் இது பசியினைத் தூண்டக்கூடியது.
  • மாட்டு தீவனத்தின் தூசுத் தன்மை, மொலாசஸ் கலப்பதால் நீக்கப்படுகிறது. மேலும், இது  தீவனத்தினைப் பிசைந்து குச்சித் தீவனம் தயாரிக்கவும் பயன்படுகிறது.
  • மாட்டுத் தீவனத்தில் 15 சதவிகிதம் வரை மொலாசஸை சேர்க்கலாம்.
 

விலங்கு மற்றும் தாவரப்புரதம்
விலங்கு கொழுப்பு தாவர கொழுப்பு
 
  • தாவர மற்றும் விலங்கு கொழுப்புகள், புரதங்கள் மற்றும் மாவு சத்துகளை விட   2.25% அதிக எரிசக்தியினை கொடுக்கும்.
  • எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருட்களை தீவனத்தில் சேர்ப்பதால் தீவனத்திலுள்ள தூசுத் தன்மையினை குறைப்பதுடன், தீவனங்களை கலக்கும் இயந்திரங்களின் தேய்மானத்தையும் குறைக்கிறது.
  • தாவர எண்ணெய்களான மக்காச்சோள எண்ணெய், கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், மற்றும் விலங்கு கொழுப்புகளான டேலோ, லார்ட் போன்றவை கால்நடை தீவனத்தில் உபயோகிக்கப்படுகின்றன.
  • விலங்கு கொழுப்பில் C20, C22, மற்றும் C24 கரைந்த மற்றும் கரையாத கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
  • தாவரக் கொழுப்பில் அதிகப்படியான லினோலியிக் அமிலம் உள்ளது.
  • தாவர மற்றும் விலங்கு கொழுப்பில் அதிகப்படியான கொழுப்பு எண்ணெய்கள் உள்ளதால், அவை கெட்டுப்போவதைத்  தடுக்க, பியூட்டிலேட்டட் ஹைட்ராக்சி டொலுவீன் மற்றும் எத்தாக்சிகுயின் போன்ற வேதிப்பொருட்கள் அதிக கொழுப்புச் சத்து நிறைந்த தீவனத்தில் சேர்க்கப்படுகின்றன.

top